திருச்சி மாநகராட்சி 45 ஆவது வார்டில் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை
திருச்சி, ஜன.20 திருச்சி மாநகராட்சி 45 ஆவது வார்டில் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை
திருச்சி மாநகராட்சி45 வார்டு உள்ள காந்திநகர் பகுதியில் ஒரு மின்கம்பம் (எண்:W-31/ 8-70) மிகவும் மோசமான நிலையில்சிமெண்ட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மின்கம்பம் ஒட்டி அமைந்துள்ளது தனியார் பள்ளி கட்டிடமும், பொது மக்கள் அதிகம் நடமாடும் இடமாகும் இப்பகுதி என்பதால் மின்கம்பத்தை உடனடியாக மாற்றியமைத்து தருமாறு மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
புதிய மின்கம்பம் நட்டு ஒரு மாதம் மேல் ஆகியும், மின்கம்பி மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார்கள், மின் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.