மணப்பாறை அருகே வீட்டின் முன்பு கட்டில் தூங்கியவர் கொடூரகொலை

0 215
Stalin trichy visit

திருச்சி, ஜன.20 மணப்பாறை அருகே வீட்டின் முன்பு கட்டில் தூங்கியவர் கொடூரகொலை. போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 55). தனியார் கேஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் டெலிவரி மேனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு உள்ள தாழ்வார பகுதியில் ஹாஸ்பிடாஸ் கூரையின் கீழ் கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டினுள் தூச்கியுள்ளனர். இன்று காலை பால் கறப்பதற்காக அவரது மகள் தந்தையை அழைத்துள்ளார். அவரிடமிருந்து பதில் வராததால் அருகே சென்று எழுப்ப முயன்றபோது அவர் தலையில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. திருச்சி பயிற்சி எஸ்.பி.,க்கள் பிஷ்வஜிங்பண்டா, விக்னேஷ், மணப்பாறை டி.எஸ்.பி., காவியா மற்றும் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை மற்றும் தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் நிலாவும் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகள் குறித்த தடயங்கள் கிடைக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்த சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று திரும்பியது. அப்பகுதியில் குற்றவாளியின் தடயங்கள் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்கள் கிடைக்கிறதா என போலீசார் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து சிவசுப்பிரமணியன் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிவசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.