திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு மு. க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

0 82
Stalin trichy visit

 திருச்சி ஜன.28 திருச்சி விமான நிலையம் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பரணிகுமார் இல்ல திருமண விழா மற்றும் கும்பகோணத்தில் அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறும் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.

திருச்சி விமான நிலையம் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் கோவி செழியன்,மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன்,மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள், சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், கதிரவன், இனிக்கோ இருதயராஜ்,
துரை.சந்திரசேகர்,டிகேஜி நீலமேகம் மத்திய மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம்,மத்திய மாவட்டம் முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்,பொருளாளர் துரைராஜ்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல்,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ்,காஜாமலை விஜய்,நாகராஜன், கமால் முஸ்தபா,ராம்குமார்,வக்கீல் இளங்கோ,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,மத்திய மாவட்ட வர்த்தகர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் தொழிலதிபர் ஜான்சன் குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கலந்தர் பஷீர்,
மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத்,கவுன்சிலர்கள் கலைச்செல்வி, விஜயா ஜெயராஜ்,புஷ்பராஜ்,ராமதாஸ்,மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ்,வாமடம் சுரேஷ், பி.ஆர்.பி. பாலசுப்பிரமணியன்,மார்சிங் பேட்டை செல்வராஜ்,தனசேகர்,நிர்வாகிகள் இன்ஜினியர் நித்தியானந்தம்,பந்தல் ராமு,பிராட்டியூர் மணிவேல், சர்ச்சில்,ரஜினி கிங்,அபூர்வா மணி,எம்.ஆர் எஸ்.குமார்,
உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்..

Leave A Reply

Your email address will not be published.