கம்பரசம் பேட்டை நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி, ஜன.28 கம்பரசம் பேட்டை நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ்
பொய்யாமொழி ஆய்வு.
புதிதாக இணைக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துதல்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் 2011ல் சேர்க்கப்பட்ட திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாகுறிச்சி ஊராட்சி, எல்லக்குடி ஊராட்சி, கீழகல்கண்டார் கோட்டை ஊராட்சி மற்றும் ஆலத்தூர் ஊராட்சி, ஆகிய பகுதிகள் அடங்கிய 5 பழைய வார்டு (61, 62, 63, 64 மற்றும் 65) பகுதிவாழ் பொதுமக்களுக்கு CPHEEOன் நெறிமுறைகளின்படி நாள் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்குவதற்கு. ஜெர்மானிய வங்கி நிதி உதவியின் கீழ் (KfW) ரூ.63.70 கோடி மதிப்பீட்டில் பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு,
தொகுப்பு எண்.1ன் கீழ் காவேரி ஆற்றுப்படுகையில், புதிதாக 6.0மீ விட்டமுள்ள 18.0 மீ ஆழமுள்ள தலைமை நீர்சேகரிப்பு கிணறு கட்டப்பட்டுள்ளது.
மேற்படி நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண்.38, 39, 40, 41, 42, 43 ஆகிய பகுதிவாழ் பொதுமக்களுக்கு 27.27 MLD குடிநீர் வழங்கும் 38.00 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி- பாரி நகர் (8.00 LL), புகழ் நகர் (5.00 LL), எல்லக்குடி (பழையது) (1.00 LL), காவேரி நகர் (5.00 LL), சந்தோஷ் நகர் (8.00 LL), ஆலத்தூர் (2.00 LL), கணேஷ் நகர் (8.00 LL), அம்பேத்கர் நகர்(1.00 LL) மற்றும் பழைய 3 எண்ணிக்கைகள் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளிலிருந்து குடிநீர் வழங்கும் வகையில் 211.711 கி.மீ குடிநீர் விநியோக குழாய்களும், 21.556 கி.மீ பிரதான குடிநீர் உந்துக் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இத்திட்டத்திற்கு ரூ.64.95 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 19343 வீட்டு குடியிருப்பு குடிநீர் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்பட்டு, 88054 மக்கள் பயன் பெற உள்ளனர்.
இந்நிகழ்வின் போது மாநகரக் கழக செயலாளர் மாநகராட்சி சேர்மன் மு.மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் மாநில அணி நிர்வாகி செந்தில், பகுதி கழகச் செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், சிவக்குமார், மாமன்ற உறுப்பினர் தியாஹுதீன், வட்டக் கழக செயலாளர் கயிலை நாதன், புண்ணியமூர்த்தி, ஐ.செல்வராஜ்,
சிவசக்தி கார்த்தி, தமிழ்மணி, மன்சூர்அலி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.