திருவெறும்பூர் அருகே புதிய நியாயவிலைக்கடை : அமைச்சர் அன்பில்மகேஸ் திறந்து வைத்தார்
திருச்சி, பிப். 9 திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள கீழ குமரேசபுரம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்கள் பகுதியில் புதிய நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர் மேலும் இதனையடுத்து
(2024- 25 )நிதியாண்டின் கீழ் தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் ரூபாய் 9.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டி முடிக்கப்பட்டு நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் மேலும் இதனையடுத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களையும் வழங்கி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்
மேலும் இந்நிகழ்வில் கூட்டுறவு துறை அதிகாரிகள் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி திருவறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.