12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்

0 80
Stalin trichy visit

திருச்சி, பிப்.9  திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  மார்ச் 2026 மேல்நிலை முதலாமாண்டு (Arear) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வினை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 257 மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து 14731 மாணவர்கள் மற்றும் 16484 மாணவிகள் என மொத்தம் 31215 பேர் 133 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர்,

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களில் அறிவியல் மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் (Practical Examinations) 09.02.2026 முதல் 14.02.2026 வரை இரண்டு சுற்றுகளாக நடைபெறுகிறது.

09.02.2026 முதல் 14.02.2026 வரை நடைபெறும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) செய்முறைத் தேர்வினை 257 மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து முதல் சுற்றில் 11533 மாணவர்களும் இரண்டாம் சுற்றில் 9440 மாணவர்களும் ஆக மொத்தம் 20973 மாணவர்கள் செய்முறை தேர்வு எழுதுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செய்முறைத் தேர்வுகள் சார்பாக தலைமை ஆசிரியர் கூட்டம் 06.02.2026 அன்று காலை 10.00 மணிக்கு தெப்பக்குளம், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது 

Leave A Reply

Your email address will not be published.