மகளிர் சிறப்பு உரிமைத் தொகை ரூ.5000 வரவு வைப்பு : தி.மு.க.வினர் “ஸ்வீட் எடு, கொண்டாடு”

0 141
Stalin trichy visit

திருச்சி, பிப்.13 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில்,
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந் பின்வாங்க மாட்டேன். தேர்தலைக்காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொயை முடக்கப்பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப்பயனாளிகளுக்கும் இன்று காலை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
திராவிட மாடல் 2.0 இல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கம் வாக்குறுதி! வெல்வோம் ஒன்றாக! என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தங்களது கைபேசியில் ரூ.5000 உரிமைத் தொகையை வரவு வைத்திருப்பதை கண்ட பெண்கள் மகிழ்ச்சியை அடைந்தனர். திருச்சியில் மகளிர் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திமுக சார்பில் திருச்சி கிராப்பட்டி செல்வம் தலைமையில் மகளிர்க்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.