சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு இந்திய சோசியலிஸ்ட் கட்சி ஆதரவு

0 179
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 7 மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்குவோம் –
இந்திய சோசியலிஸ்ட் கட்சி சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு

இந்திய சோசியலிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, மொழி உரிமை கொள்கைகளை சட்டமாக்கி பெரியார், அண்ணா ஆகியோரின் கனவுகளை நினைவாகிய கருணாநிதியின் வாரிசாக விடியலின் வேந்தராக நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சி தொடர இந்திய சோசியலிஸ்ட் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவை அளிக்கிறது.

திமுக மீது அவதூறுகளை இட்டுக்கட்டி திரைக்கதை எழுதும் புதிய நடிகர்களையும், நீலி கண்ணீர் வடிக்கும் உலக மகா நடிகர்களையும் வீழ்த்துவோம். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற அயராது உழைப்பது என எங்கள் கட்சியை நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம்.

திராவிட இயக்கத்தில் வளமான ஆட்சியின் அடையாளமாக விளங்கும் மு.க.ஸ்டாலின் தூய தொண்டு தொய்வின்றி தொடரட்டும் அதற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என தெரிவித்தார்.

பேட்டியின் போது நிர்வாகிகள் முனைவர் அப்துல்ரகுமான், முருகுதேவி நாச்சியார், மேகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.