நாய்க்குட்டியை சுவற்றில் அடித்து கொலை செய்த பெண்: போலீசார் விசாரணை

0 144
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 7 திருச்சி அருகே பச்சிளம் நாய்க்குட்டியை சுவற்றில் அடித்து கொலை செய்த பெண். -ஜீயபுரம் போலீசார் விசாரணை.

திருச்சி, கம்பரசம்பேட்டை அருகே தெருவில் சில நாய்க்குட்டிகள் அங்கும், இங்கும் ஓடி திரிந்து விளையாடிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த ஒரு பெண் அந்த நாய்க்குட்டிகளை எடுத்து சுவற்றில் அடித்து கொடூரமாக கொன்றார். இதேபோல, அந்தப் பெண் தனது வீட்டின் அருகே சுற்றிய பசு மாடு மீதும் கம்பால் தாக்கியுள்ளார். அந்தப் பெண், நாய்க்குட்டிகளை கொன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் பலருக்கு நெஞ்சம் பதைபதைக்கிறது. நாய் நன்றியுள்ள பிராணி. அதுவும் குட்டி நாய்களை இப்படியா சுவற்றில் அடித்து கொல்வது என்று அந்தப் பெண்ணை வசைபாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பீப்பிள்ஸ் ஆப் அனிமல் அமைப்பிலிருந்து திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் பற்றிலும் நாய்க்குட்டியை சுவற்றில் அடித்து கொன்ற பெண் மீனாட்சி மிஸ்ரா என்பவர் என தெரியவந்தது இவர்  ஜீயபுரம் பகுதியை சேர்ந்தவர் அவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து பீப்பிள்ஸ் ஆப் அனிமல் அமைப்பை சேர்ந்த அஜய் மற்றும் அன்பரசி கூறும்போது, பச்சிளம் நாய்க்குட்டியை அடித்து கொலை செய்த இந்த பெண் அங்கு இருந்த பல நாய்க்குட்டிகளை கேரிப்பையில் போட்டு மரத்தில் தொங்க விட்டு உள்ளார் இவர் அப்பகுதியில் வரும் கால்நடைகளையும் தாக்குகிறார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் ஒரே நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். மேலும் வளர்ப்பு பிராணிகள் தாக்கப்பட்டால் இது குறித்து புகார் அளிப்பதற்கு முறையான ஒரு இடம் இல்லாமல் உள்ளது காவல் நிலையத்திற்கு சென்றால் அலைக்கழிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.