மூதாட்டியை தாக்கி பணம் பறிப்பு : சிறார் உள்பட 3 பேர் கைது

0 177
Stalin trichy visit

திருச்சி மார்ச் 7 கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லன் இவரது மனைவி கதிர் (வயது71).இவர் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் கேரளா செல்ல சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அருகில் வந்த மூன்று மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கதிர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக கதிர் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திடமாக சுற்றி திரிந்த மூன்று மர்ம ஆசாமிகளை பிடித்து விசாரணை செய்தபோது உறையூர் காவேரி நகரை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 18) கிருஷ்ணன் (வயது 22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேர் சேர்ந்து மூதாட்டி இடமிருந்து பணம் கமர் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதன்குமார், கிருஷ்ணன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர் 16 வயது சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துகைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன், கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.