திருவரங்கத்தில் பெண் மாயம்
திருச்சி மார்ச் 7 திருவரங்கத்தை சேர்ந்தவர் ரெங்கநாயகி இவரது மகள் 26 வயதுள்ள பெண் திருமணம் ஆகி கணவனை இழந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ந் தேதி வீட்டில் இருந்து அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்று வருவதாக கூறி போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தாய் ரெங்கநாயகி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.