மணப்பாறை அருகே ஆவாரம்பட்டியில் ஜல்லிக்கட்டு

0 164
Stalin trichy visit

திருச்சி, மார்ச்7  மணப்பாறை அருகே ஆவாரம்பட்டியில் ஆட்டம் காட்டும் காளைகள் அதிரும் ஜல்லிக்கட்டு களம். போட்டியில் 850 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள ஆவாரம்பட்டி புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இன்று புனித இஞ்ஞாசியார் தேவாலயத்தின் முன்பு உள்ள திடலில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் களத்தில் நின்று ஆட்டம் காட்டுவதும் அதை வீரர்கள் பிடித்து அசத்துவதும் என களமே களைகட்டினாலும் பார்வையாளர்களின் ஆரவாரம் களத்தையே அதிர வைக்கின்றது.

இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 850 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
அடக்க வந்த மாடுபிடி வீரர்களை தூக்கிவீசி பந்தாடிய திறமைவாய்ந்த காளைகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் காளையை அடக்கிய வீரர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சைக்கிள்கள், பீரோ, கட்டில், மெத்தை, சேர், மின்விசிறி, கடிகாரம், குக்கர், சில்வர் குடம் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 200க்கும் மேற்ட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் பொதுமக்கள் கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டை காண திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.