திமுக அரசை விரட்ட அனைவரும் ஓரணியில் இணைந்துள்ளோம் : பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி

0 177
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 7  திமுக அரசை விரட்ட வேண்டும் என அனைவரும் ஓரணியில் இணைந்துள்ளோம் – முசிறியில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி.

திருச்சி மாவட்டம், முசிறியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  முசிறி நகர மண்டல் தலைவர் தமிழ்ச்செல்வன்
தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தமிழகத்தின் மாநிலத் தலைவர்
நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

முன்னதாக அவருக்கு முசிறி கைகாட்டியில் நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் முசிறி சட்டமன்ற தொகுதியிலிருந்து தொண்டர்களை அழைத்து வருவதற்காக 200 வாகனங்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும். ஒவ்வொரு நிர்வாகிகளும் முழு ஈடுபட்டுடன் அதிக அளவிலான தொண்டர்களை அழைத்து வர ஈடுபட்டுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
குறைந்தபட்சம் 5000 பேரை முசிறி தொகுதியில் இருந்து அழைத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட நிலையில்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஊடகங்களுக்கு
பேட்டியளித்தார்.

திமுக அரசை விரட்ட வேண்டும் என்பதற்காக அனைவரும் ஓரணியில் இணைந்துள்ளோம். எங்கு பாத்தாலும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளிக்கு புத்தகத்தை சுமந்து செல்லும் மாணவர்கள் பையில் கஞ்சாவை வைத்துள்ளனர்.
2021 -யை காட்டிலும் 5 ஆண்டுகளில்  667 மடங்கு அதிகமாக போதை பொருள் விற்பனை நடைபெற்றுக் கொண்டுள்ளது. பத்தரை இலட்சம் கோடிக்கு மேல் தமிழக அரசு கடனாளியாக உள்ளது.
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு லட்சத்தி 35 கடனாளியாக உள்ளனர். குடும்பத்தின் ஆட்சியாகதான் உள்ளது .மக்களின் ஆட்சியாக இல்லை. மக்களோடு இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்.
நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஊழல் இல்லா ஆட்சி நடைபெறுவது போல் நாட்டு மக்களின் நலன் கருதி ஊழல் இல்லா ஆட்சியை தமிழகத்திலும் அமைப்போம்.
போதைப் பொருள் இல்லாத அரசாங்கத்தை அமைப்போம். நரேந்திர மோடி அவர்கள் 47 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே பட்டன் அழுத்தி ஆண்டு ஒன்றுக்கு 6000 ரூபாய் வழங்கினார்.
மத்திய அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்று 20 லட்சம் பேரை தமிழக அரசு குறைத்துள்ளனர். யூரியாவின் விலை 300 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது ஆனால் அதன் உற்பத்தி விலை 1500 ரூபாய் ஏற்கனவே விவசாயிகளுக்கு சலுகை விலையில் ஈடுபொருள்களை மத்திய அரசு வழங்கி வருகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டாலும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு பாடுபடும் அரசாக இந்த மத்திய அரசு உள்ளது. விவசாயிகளுக்காக மத்திய அரசு தனி பட்ஜெட் போட்டு உள்ளது.
ஆனால் திமுக விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.
திமுக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற குருவை சாகுபடிக்கு செப்டம்பர் மாதம் அறுவடை செய்யப்பட்டு அதனை உடனடியாக நெல் கொள் முதல் செய்யவில்லை. 846 ஹட்டர் பரப்பிலான நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாததால் விவசாயிகளுக்கு 346 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் நான் டெல்டாகாரன் என்று சொல்லிக் கொள்கிறார்.
விவசாயிகளுக்கு இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.நிச்சயமாக ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக ஆட்சிக்கு
தமிழக அரசு வந்தது.  ஆனால் மத்திய அரசு பத்து ரூபாயை குறைத்த பின்னரும் கூட தமிழக அரசு குறைக்கவில்லை. சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்போம் என்று கூறினார். திமுக அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட குறைக்கவில்லை. பிரதமர் மோடி அவர்கள் சிலிண்டர் விலையை குறைத்தார்கள். சப்ஸ்டியூட் பணம் மக்களின் வீடுகளுக்கு கிடைக்கும் வகையில் செய்தார்கள்.  இன்று உயர்ந்துள்ள
கேஸ் விலை நிச்சயமாக விலை குறையும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.