தி.மு.க. மாநில மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை

0 153
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9  திருச்சியில் திமுக 12வது மாநில மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

திருச்சி விமானநிலையத்தில் தமிழக முதல்வருக்கு, காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சரவணன், தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர்களான கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவசங்கர், மெய்யநாதன், பெரிய கருப்பன்,

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.ராசா, திருச்சி சிவா, கே.என்.அருண் நேரு, ஜெகத்ரட்சகன், கவிஞர் சல்மா,

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஓ.பி.எஸ்.ரவிந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.