எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

0 157
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9  திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எம்.ஐ.டி (MIT) பொறியியல் கல்லூரியில், “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா  நடைபெற்றது.

விழாவில் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து  கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், நவீன தொழில்நுட்ப உலகில் மடிக்கணினிகளின் அவசியம் குறித்தும், மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி எவ்வாறு தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ஃப்ளோரி வயலட் ஆறுன் துணைத் தலைவர் (Vice Chairman) அப்துல் ஜலீல் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்:

விழாவில்  மொத்தம் 220 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் அமைச்சர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்குத் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.