திருச்சியில் பேருந்துகள் மோதியதில் இருவர் உயிரிழப்பு

0 170
Stalin trichy visit

திருச்சி மார்ச் 10 – தஞ்சை மாவட்டம் திருவையாறு மருதகுடி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 39) இவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் திருச்சிக்கு வந்தார். திருச்சி – புதுக்கோட்டை சாலையில் ஜெயில் கார்னர் பகுதியில் சென்ற போது அதே திசையில் வேகமாக வந்த அரசு பஸ் எதிர்பாராதமாக ரஞ்சித் குமார் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலே ரஞ்சித் குமார் பரிதாபமாக இறந்தார்.

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர்பகுதியை சேர்ந்தவர் சந்திரமூர்த்தி (வயது 58) இவர் நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் வ உ சி ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராதமாக சந்திர மூர்த்தி மீது மோதியது. இந்த சம்பவத்தில் சந்திரமூர்த்தி தலையில் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் சந்திரமூர்த்தி இறந்துவிட்டதாக கூறினார்.மேற்கண்ட இரண்டு விபத்து சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.