திருச்சி என்றால் எழுச்சி, திருச்சி என்றால் வெற்றி : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
திருச்சி, மார்ச் 10 திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை நடைபெற்ற தி.மு.க மாநில மாநாட்டில் தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசும் போது,
திருச்சி மாநாடு இடம் முழுவதும் திரும்பும் திசையெல்லாம் கருப்பு, சிவப்பு தெரிகிறது. மாநாடு நடைபெறும் இந்த திருச்சி சிறுகனூர் அல்ல..பெறுகநூறாக காட்சி அளிக்கிறது.
கடந்த 3 மாதமாக நாம் நடத்துவது மாநாடுதான். இதில் லட்சக்கணக்கான தொண்டர்களை அழைத்து தேர்தல் பணி தொடங்கி உள்ளோம். ஆனால் இன்று அதெற்கெல்லாம் உச்சியாக, அனைத்தையும் மிஞ்சும் அளவிற்கு மாநில மாநாடு திருச்சியில் பிரமாண்ட முறையில் நடக்கிறது.
இங்கு திமுக தொண்டர்கள் கொடுத்த வரவேற்பு என் வயதை குறைத்து உள்ளது.என் பிறந்தநாளில் தலைவர்கள் வாழ்த்து சொன்னபோது, எனக்கு வயது அதிகம் ஆகவில்லை என சொன்னார்கள்.
ஆன்மீக அன்பர்கள் சொல்வார்கள் என்னதவம் செய்தோமோ என்று.. அதே போல,. நான் வயது ஆனது தெரியாமல் இருப்பதற்கு காரணம் நீங்கள்தான். நான் வளர, முதல்வர் ஆவதற்கு நீங்கள்தான் காரணம்.
கிரிக்கெட் மேட்ச் போல கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெல்வது போலதான் இங்கு நடக்கும் மாநாடு. இந்த மாநாட்டை அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாடு செய்து உள்ளார்.
மாநாடு நடத்துவது என்றால் அமைச்சர் நேரு உற்சாகம் அடைவார்.
மாநாடு என்றால் நேரு, நேரு என்றால் மாநாடு. 200 ஏக்கர் நிலத்தில் மாநாடு தயார் செய்து 200 இடங்கள் வெற்றிபெற வேண்டும் என நேரு சொல்லிவிட்டார்.
தேர்தலில் தனிப்பட்ட ஸ்டாலினுக்கான முழக்கம் இல்லை. திமுக தொடரட்டும் என்பதுதான் பொருள். இன்று நடத்தும் 12 வது மாநில மாநாட்டில் 7 முறை திருச்சியில் நடந்துள்ளது.
பெரியார், அறிஞர் அண்ணா ஒரே சிறையில் இருந்தது திருச்சியில் தான். ஹிந்தி எதிர்ப்பு முதல் கல்லக்குடி போராட்டத்தில் கருணாநிதி சிறையில் அடைக்கப்பட்டது திருச்சியில் தான். திருச்சி என்றால் திருப்பம். திருச்சி என்றால் எழுச்சி. திருச்சி என்றால் வெற்றி.
தமிழ்நாட்டை திமுக தொடர்ந்து ஆள வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். 7வது முறை அல்ல எப்போதும் திமுக தான் வெல்லும்.
நமக்கு என்று வரலாறு உள்ளது. தமிழை காப்பாற்றியது, தமிழ்நாட்டுக்கு பெயர் வைத்தது. தமிழை காப்பாற்றுவது நாம் தான். திமுக ஆட்சி தொய்வு இல்லாமல் தொடரனும். பெரியார் 1971 தேர்தலில் சொன்னது இதுதான்., திமுக வென்றால் தமிழ் சமூகம் வாழும் என பெரியார் கூறினார்.
2021 சட்டமன்ற தேர்தலில் 7 தேர்தல் வாக்குறுதி அளித்தேன். ஏழும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். யாராலும் மறுக்க முடியாத உண்மை.
தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு., தமிழகம் முதலிடம் என சொல்கின்றனர். 5 ஆண்டுகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டு முன்னேறி உள்ளோம்.
2014-2021 வரை அதிமுக ஆட்சியில் 471 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.. திமுக ஆட்சியில் 1190 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 4 லட்சத்தி 13 ஆயிரம் கோடி முதலீடு வந்தது. திமுக ஆட்சியில் 12லட்சத்தில் 133 கோடி முதலீடு வந்தது 3 மடங்கு அதிகம்.
அதிமுக ஆட்சியில் 4 சிப்கார்டு துவங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 33 சிப்காடுகளை தொடங்கியது. 13500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டது.
அதிமுக ஆட்சியில் 57.25 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்த நிலத்தை 62.5 லட்சம் ஏக்கர் ஆக உயர்த்தி அறுவடை செய்து உள்ளோம்.
அதிமுக ஆட்சியில் விளையாட்டு துறை மூலம் 3 பேர் தான் வேலை வாய்ப்பு பெற்றனர். திமுக ஆட்சியில் 320 வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சொல்லமுடியாத அளவிற்கு திட்டங்கள் செய்து உள்ளோம். அதன் காரணமாகத்தான் நான் 200 தொகுதி வெல்வோம் என கூறுகிறோம். விரைவில் தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளோம்..மற்ற கட்சிகள் இன்ஸ்டால்மெண்டில் அறிக்கை வெளியிடுகின்றனர்.
திமுக திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது. எவராலும் மற்ற முடியாத திட்டம்தான் முத்துவேல் கருணாநிதி திட்டம்…
அதிமுக கூட்டணி என்றால் மோடி அமித்ஷா கோபித்து கொள்வார்கள். அது NDA கூட்டணி. சுயமாக கூட்டணி பெயர் கூட சொல்ல முடியவில்லை.
கல்வி நிதி, 100 நாள் வேலைவாய்ப்பு நிதி என மத்திய அரசு ஏதும் தரவில்லை. கோவை,மதுரை, திருச்சிக்கு மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. ஆளுநர் மூலம் தொந்தரவு. அமலாகத்துறை மூலம் மிரட்டும் செய்கின்றனர். தமிழ்நாட்டை திட்டமிட்டு புறக்கனுக்கும் NDA கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். உங்க டப்பா என்ஜின்ஜ்க்கு தமிழ்நாடு No தான் சொல்லும்.
தமிழ்நாடு அணியா டெல்லி அணியா என்று நான் கூறினேன். தேர்தலுக்காக மட்டும் மக்களிடம் வரும் காட்சி திமுக இல்லை. அதிமுக முகமூடியை போட்டுகொண்டு பாஜக வந்தால்.. முகமூடியை கிழிப்போம். காவியை பூச விடமாட்டோம்.
அதிமுகவை பாஜக விழுங்குகிறது. அதிமுக தொண்டர்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளது எடப்பாடி பாஜகவிற்கும் அடிமையாக உள்ளார்.
பீஹாரில் நிதிஷ் குமாரை வைத்து பாஜக வெறிப்பெற்று விட்டு, தற்போது பாஜக வை முதல்வர் ஆக்க பார்க்கிறார்கள்.
அதே போல் அதிமுகவை வைத்து பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய போகிறது.
பாஜக திமுகவை மிரட்ட முடியாது. எப்போதும் தமிழ்நாடு out of கண்ட்ரோல் தான்.
எங்கள் மண்ணில் நாங்கள்தான் வெற்றிபெருவோம்.
திமுக – NDA இடையே போட்டி இல்லை. தமிழர்கள் – NDA இடையே தான் போட்டி.
திமுக கூட்டணி கட்சிக்கும் தொண்டர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோரை மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தனர் அதற்கு பிறகு ஸ்டாலினை தான் மக்கள் தேர்ந்தெடுத்தனர்.
திமுக ஆட்சிதான் சொன்னதை செய்யும் சொல்லத்தையும் செய்யும்.
தேர்தலில் உழைக்க நான் ரெடி நீங்கள் ரெடியா..?
மீண்டும் வெல்வோம் மீண்டும் மீண்டும் வெல்வோம் என்றார்.