திருச்சி ஸ்ரீ நற்பவி யோகாலயாவில் மகளிர் தின விழா
திருச்சி, மார்ச் 10 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி, வயலூர் ரோடு, சீனிவாசநகர், 5வது மெயின்ரோடு, 2வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ நற்பவி யோகாலயாவில் மகளிர் தினம் (08.03.26) அன்று கொண்டாடப்பட்டது. B.R.ஜெயஶ்ரீ வரவேற்புரையாற்றி, நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஜென்னிஸ் உடற்கல்வி கல்லூரியின் முதல்வர் டாக்டர். அருள்மொழி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி, யோகா பற்றியும, அதனை தினமும் பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்கள் பற்றியும் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.
ஸ்ரீ நற்பவி யோகாலயாவின் நிர்வாக இயக்குனர் சேவை ரத்னா பெ.பூமிகா , யோகாசன பயிற்சியும், தியான பயிற்சியும் அளித்தார்.
ஶ்ரீ நற்பவி யோகாலயாவில் , யோகா பயிலும் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் ஆசனங்களை செய்தனர்.
A.R.பிரதிஷா மகளிர் தினத்தை பற்றி சிறப்புரை வழங்கினார். யோகா வகுப்பில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஶ்ரீ நற்பவி யோகாலயாவின் உரிமையாளர் யோகா ஆசிரியர் கலைமாமணி சேவை ரத்னா மு.பரமேஸ்வரன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார். நிறைவாக ஸ்ரீ நற்பவி யோகாலயா ஒருங்கிணைப்பாளர் யோகா ஆசிரியர் கலைமாமணி சேவை ரத்னா சித்ரா பெருமாள் நன்றி கூறினார்.