சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி மணப்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 46
Stalin trichy visit

மணப்பாறையில் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் கண்டன முழக்கம்.

“தமிழ்நாடு vs என்டிஏ” “தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை என்ற முழக்கத்துடன் திமுக கூட்டணி கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆண்டவர் கோவில் பிரிவு சாலையில் திமுக, தேமுதிக காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து மோடி அரசை கண்டித்து உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய் தட்டுப்பாடு இல்லாமல் சமையல் எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடு உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய அரசைக்கண்டித்தும் மணப்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மணப்பாறை கிழக்கு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.