சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி திமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம்

0 45
Stalin trichy visit

மணப்பாறை : ஒன்றிய அரசு எரிவாயு தட்டுப்பாட்டை போக்காமல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம்.

ஈரானுடன், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.‌ இதனால் ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரியாக கையாள தவறிய ஒன்றிய அரசை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரங்கள் வழங்கினர். சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்காமல் அதன் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசே மக்களிடம் மன்னிப்பு கேள் … என்ற வாசகத்துடன் உள்ள துண்டுப்பிரசுரங்கள் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், கடை வியாபாரிகள் பொதுமக்களிடமும் வழங்கி சிலிண்டர் விலையேற்றம் தட்டுப்பாடு குறித்தும் விளக்கி கூறினர். மேலும் ஒன்றிய அரசுடன் தற்போது யார் கூட்டணி வைத்துள்ளனர் அவர்களுக்கு ஆதரவளிப்பதால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதகங்கள் குறித்தும் விளக்கி கூறி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.