முசிறி தொகுதியில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

0 78
Stalin trichy visit

முசிறி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செலவின பார்வையாளர்
அஜீத்குமார் நிராளா (IRS)ஆய்வு மற்றும் செலவினம் குறித்த ஆலோசனைகள் வழங்கினார்…

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அஜீத்குமார் நிராளா (IRS) முசிறி பெரியார் பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டதையும், தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை
ஆகிய பகுதிகளில் நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்ததை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்தில் செலவின கணக்குகள் கண்காணிக்கப்பட வேண்டிய இனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி சென்றார், உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள், முசிறி தேர்தல் பிரிவு அலுவலர்கள் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.