மணப்பாறை சிப்காட்டில் ரூ.868 கோடி மதிப்பில் பெப்சிகோ நிறுவனம் பூமிபூஜை போட்டு பணிகள் தொடக்கம்
திருச்சி, நவ. 25 மணப்பாறை சிப்காட்டில் ரூ.868 கோடி மதிப்பில் பெப்சிகோ நிறுவனம்
பூமிபூஜை போட்டு பணிகள் தொடக்கம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சிப்காட்டில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் நிறுவனங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பெப்சிகோ நிறுவனம் சார்பில் ரூ.868 கோடி மதிப்பில் உணவு பொருள் தயாரிப்பு ஆலையை அமைக்க பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. 28 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள ஆலை 2028 ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆலையின் மூலம் 650 பேருக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் சிப்காட் அதிகாரிகள் மற்றும் பெப்சிகோ நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.