முசிறி அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் சுமார் 1000 டன் நெல் மழையில் நனைத்து சேதம் : விவசாயிகள் வேதனை

0 190
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 21  முசிறி அருகே வடுகப்பட்டி, அயினாப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 1000 டன் நெல் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை – ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வடுகப்பட்டி மற்றும் அயினாப்பட்டி உள்ளிட்ட பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்தும் சுமார் ஒரு ஏக்கருக்கு ரூ35 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர், விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்லை முசிறி அருகே உள்ள வடுகப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்வதற்காக அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மண் தரையில் சுமார் 300 டன் நெல் கொட்டப்பட்டுள்ளது,

மேலும் அயினாப்பட்டி பகுதியிலும் நெல் கொள்முதல் நிலைய பகுதியிலும், வயல்வெளி பகுதியில் நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர், அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து சுமார் 20 நாட்களுக்கு மேலாகியும் கொள்முதல் நிலையத்தில் நெல்லை எடுக்கவில்லை என குற்றச்சாட்டாக உள்ள நிலையில் நேற்று இரவு இடி, மின்னலுடன் திடீரென பெய்த கன மழையால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டன் நெல் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது,

நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் முறையாக வருவதில்லை என்றும், இவர்களின் அலட்சிய போக்கால் நெல் மழையில் நனைந்து உள்ளது, மழையில் நனைந்த நெல்லை ஈரப்பதம் கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் செய்யவும், நெல் சேதமடைந்தால் மத்திய அரசு இழப்பீடு வழங்கவும் அனைத்து வசதிகளுடன் நிரந்தரமான நெல் கொள்முதல் அமைத்து அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.