தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் தேர் திருவிழா ஒருங்கிணைப்பு ஆலோசனை குழு கூட்டம்

0 349
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 21  முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் தேர் திருவிழா ஒருங்கிணைப்பு ஆலோசனை குழு கூட்டம் – சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு பாதுகாக்க அறிவுறுத்தல்

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் பங்குனி தேர் திருவிழா தொடர்பான ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு முசிறி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காவல்துறை, அறநிலையத் துறை, நீர்வள ஆதாரத்துறை, பேரூராட்சி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேர் திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு குந்தகம் ஏற்படாதவாறு பக்தர்கள் நடந்து கொள்ளவும், தேர் திருவிழாவில் வருடம் தோறும் பின்பற்றப்படும் வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. கூட்டத்தில் தொட்டியம் பகுதியை சேர்ந்த கிராம முக்கியஸ்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.