ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு “காரம்பசு” மாட்டை எம்.எல்.ஏ பழனியாண்டி தானமாக வழங்கினார்

0 216
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 21  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு “காரம்பசு” மாட்டை தானமாக வழங்கினார் எம்.எல்.ஏ பழனியாண்டி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இன்று காரம்பசு மாட்டை தானமாக வழங்கினார்.

உயர்வகையைச் சேர்ந்த அபூர்வமான காரம்பசு மாட்டை எம்.எல்.ஏ பழனியாண்டி இன்று காலை கோயிலுக்கு நேரில் கொண்டு வந்தார். கோயிலின் அர்ச்சகர்கள் முன்னிலையில், அந்தப் பசுவிற்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
பூஜைகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, பசுமாட்டினை கோயில் அதிகாரிகளிடம் அவர் முறைப்படி ஒப்படைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.