திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் தேர்வு
திருச்சி, மார்ச் 23 திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் தேர்வு செய்யும் நிகழ்வு தொடங்கியது.
2026 சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் தேர்வு செய்யும் நிகழ்வு தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஜெகதீஷ் பிரசாத் மீனா, ஜெரம் பேடா, சக்ரதார்பாபு, பிஜய்குமார் தாஸ், பிரவீன்குமார் லஷ்கர், மதுஸ்மிதா சாஹு, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.