திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேட்டி

0 79
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 30 திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேட்டி

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த இனிகோ இருதயராஜ் பேட்டியில்

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட இரண்டாவது முறையாக முதலமைச்சர் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளார். நிச்சயமாக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.

விஜய் தைரியமும் திராணியும் இல்லாதவர் அதனால் தான் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் உண்மையில் தைரியமானவராக இருந்தால் பெரம்பூர் தொகுதியை விட்டுவிட்டு திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடட்டும் நிச்சயம் நான் வென்று காட்டுவேன்.

அறிவாலயத்தை தேவாலயம் என்றும் கைவிடாது. கிறிஸ்தவ மக்களும் இஸ்லாமிய மக்களும் நிச்சயம் திமுகவிற்கு தான் ஆதரவளிப்பார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜகவின் செயல்பாடுகளை கண்டித்து இதுவரை விஜய் பேசியது கிடையாது அவர் பாஜகவின் பீ டீமாக தான் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.