திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி: கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்
திருச்சி, மார்ச் 30 திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி: கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
களத்தில் பணியாற்றினால் தான் வெற்றி பெற முடியும் திரைப்படம் போல் வந்து நடித்து விட்டுப் போனால் மட்டும் போதாது. விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் அடுத்த 30 நாள் களப்பணியற்றுவாரா என சவால் விடுகிறேன். மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நன்றாக தெரியும்.
திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி. விஜய் எங்களுக்கு பொருட்டே கிடையாது. தேர்தலில் தோல்வியடைந்த பின்பு அவர் களத்திற்கு வர மாட்டார்
பயத்தின் காரணமாக தான் விஜய் இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.