முசிறி தொகுதியில் திமுக வேட்பாளர் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்

0 239
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியில் திமுக வேட்பாளர் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி திமுக வேட்பாளராக கருணை ராஜா அறிவிக்கப் பட்டுள்ளார்.

இதையடுத்து இன்று முசிறி வருகை தந்த திமுக வேட்பாளர் கருணை ராஜா, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்பி அருள்நேரு மற்றும் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ , ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பலர் முன்னிலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

அதனைத் தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில் நிர்வாகிகளை நேரில் சந்தித்து அனைவரிடமும் வாழ்த்து பெற்றார். அப்போது பேசிய மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் திமுக வேட்பாளர் கருணை ராஜாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து முனைப்புடன் பணியாற்றி பாடுபட வேண்டும். மீண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைந்து நல்ல பல திட்டங்கள் தொடர வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.