லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் கிராம நிருவாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

0 105
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 30  லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் கிராம நிருவாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

புகார்தாரர் பெ.விஸ்வநாதன் (வயது 73) த/பெ.பெரியசாமி என்பவரது பெரியம்மா மகன் செல்வராஜ் பெயரில் உள்ள விவசாய நிலத்திற்கு நிலஉரிமை சான்றிதழ், நான்கெல்லை சான்று, அடங்கல் மற்றும் நிலத்தின் வரைபடம் ஆகியவை வழங்க ரூ.1,000/- கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில், ஆர்.ஜெகநாதன் (வயது 71) முன்னாள் கிராம நிர்வாக அலுவலர், மோருப்பட்டி கிராமம், (பொறுப்பு)வடமலைப்பட்டி கிராமம், முசிறி தாலுகா, திருச்சி மாவட்டம் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, வடமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளையா பிள்ளை என்பவரது மகன் செல்வராஜ் என்பவர், வடமலைப்பட்டி கிராமத்தில் உள்ள தன்னுடைய விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற தாத்தையங்கார்பேட்டையில் உள்ள மின்சார வாரியத்தில் விண்ணப்பித்துள்ளார். மேற்படி விவசாய நிலத்திற் உண்டான நிலஉரிமை சான்றிதழ், நான்கெல்லை சான்று, அடங்கல் மற்றும் நிலத்தின் வரைபடம் ஆகியவைகளை கேட்டு, மின்சார வாரியத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்படி .செல்வராஜ் இலங்கை இருப்பதால், அவரது சகோதரர் திருச்சி மாவட்டம், திருவானைகோவில், அகிலா கார்டன் என்ற முகவரியில் வசித்து வந்த பெரியசாமி மகன் புகார்தாரர் விஸ்வநாதன் என்பவரிடம் மேற்படி நிலஉரிமை சான்றிதழ், நான்கெல்லை சான்று, அடங்கல் மற்றும் நிலத்தின் வரைபடம் ஆகியவைகளை பெற்று தரும்படி கேட்டுள்ளார். அதன்படி விஸ்வநாதன் மேற்படி ஆவணங்களை பெற திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, மோருப்பட்டி கிராமம், (பொறுப்பு) வடமலைப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் ஜெகநாதன் என்பவரை கடந்த 11.01.2011ஆம் ஆண்டு காலை சுமார் 09.00 மணிக்கு அணுகியுள்ளார்.

அப்பொழுது வடமலைப்பட்டி  பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் .ஜெகநாதன், புகார்தாரர் விஸ்வநாதனின் சகோதரர் பெயரில் உள்ள விவசாய நிலத்திற்கு நிலஉரிமை சான்றிதழ், நான்கெல்லை சான்று, அடங்கல் மற்றும் நிலத்தின் வரைபடம் தர ரூ.1,000/- லஞ்சமாக கேட்டு, அது தொடர்பாக விஸ்வநாதனின் புகார்மனு பேரில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 11.01.2011ஆம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 12.01.2011ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர்விஸ்வநாதன் என்பவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.1,000/-த்தை கேட்டு பெற்ற போது எதிரி ஜெகநாதன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இன்று 30.03.2026ஆம் தேதி விசாரணை முடிவுற்று, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.புவியரசு , ஜெகநாதன் (வயது 71), முன்னாள் கிராம நிர்வாக அலுவலர், மோருப்பட்டி கிராமம் (பொறுப்பு வடமலைப்பட்டி கிராமம்) முசிறி தாலுகா, திருச்சி மாவட்டம் என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ5,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், மேலும் அரசு ஊழியர் என்ற பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கில் DSP மணிகண்டன், Inspector அ.பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்தும், அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிகண்ணன்  வழக்கை திறம்பட நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.