விஜய் ஒரு மாய பிம்பம் அவரை பற்றி பேசி பெரிதாக்க வேண்டாம் : இனிகோ இருதயராஜ் பேச்சு

0 91
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 31  விஜய் பற்றி பேசி பெரிசாக்க வேண்டாம் அவர் மாய பிம்பம் சினிமா மோகம், 5 வருடம் தொகுதிகாக உழைத்து உள்ளேன் – விஜய்யை எதிர்த்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பேச்சு

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் இனிக்கோ இருதரராஜ் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பங்கேற்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார். தொடர்ந்து அவர் பேசும்போது  தேர்தலில் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்கும் தான் போட்டியே மத்தவங்க எல்லாம் சைடுல போய் விளையாடுங்கள் என்பது போல நாம் பார்க்க வேண்டும்

அவரைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை அவரை பேசி பெருசாக்க வேண்டாம் அவர் மாய பிம்பம் ,சினிமா மோகம் நான் 5 வருடம் இந்த தொகுதிக்கு உண்மையான உழைப்பை தந்து உள்ளேன் எனவே எனக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Leave A Reply

Your email address will not be published.