திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்
திருச்சி, ஏப்.1 முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் போட்டியிடக்கூடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு பிரச்சார பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்பு இரவு திருச்சி வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருச்சியில் ஓய்வு எடுத்தார்.
இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட் பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடை பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் .இறுதியாக பாலக்கரை பகுதியில் உள்ள டீக்கடையில் சென்ற முதலமைச்சர் அங்கு தேநீர் அருந்தினார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார் அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.
அப்போது அமைச்சர்கள் கே என் நேரு ,அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.