திறந்த வாசல் சபை தாலுகா போதகர்களிடம் அன்பில் மகேஸ் வாக்கு சேகரித்தார்
திருச்சி, ஏப்.3 திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துவாக்குடி வ.உ.சி நகரில் உள்ள ‘திறந்த வாசல்’ சபையில் தாலுகா போதகர்கள் ஐக்கியத்தினரைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வின் போது, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, நகரக் கழகச் செயலாளர் காயம்பூ, கழக நிர்வாகிகள் மற்றும் போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர் பிஷப் ஜான் பீட்டர், துணைத் தலைவர் பாஸ்டர் லூகாஸ், பாஸ்டர் அலெக்ஸ், செயலாளர் பாஸ்டர் இஸ்ரவேல் தேவனேசன், பாஸ்டர் அமல்ராஜ், பொருளாளர் பாஸ்டர் ஜார்ஜ் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போதகர்கள் கலந்துகொண்டனர்.