திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு பீமநகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்

0 124
Stalin trichy visit

திருச்சி, ஏப். 4  திருச்சி மாநகர் திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே என் நேரு இன்று தனது பிரச்சாரத்தை பீமநகர் பகுதியில் தொடங்கினார் அப்போது பொதுமக்களிடையே திறந்து வழி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது திருச்சி மாவட்டத்திற்கு சுமாராக 27ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் சாலை பாதாள சாக்கடை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட்டுள்ளது. இது போன்று மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். ஆகையால் மீண்டும் இந்த நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னையும் மீண்டும் முதல்வராக ஸ்டாலின்  அமர்வதற்கு அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்

Leave A Reply

Your email address will not be published.