திருச்சி மேற்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப்.4 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக, அமமுக, திமுக. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீவிரவாக்கு செயல்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும்
தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சியான டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராஜசேகர் உறையூர், ராமலிங்க நகர், அம்மன் நகர், லோட்டஸ் நகர், நியூ காலனி, புத்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி சாருபாலா தொண்டைமான் உட்பட பல பங்கேற்றனர்.