மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் பிரச்சாரம்
மண்ணச்சநல்லூர்தொகுதிதிமுகவேட்பாளரும்எம்.எல்.ஏவுமான கதிரவன் நேற்றுமண்ணச்சநல்லூர்மத்தியஒன்றியத்திற்குட்பட்டசீதேவிமங்கலம், பெரகம்பி, வாழையூர், மணியங்குறிச்சி, எம்.ஆர்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “மண்ணச்சநல்லூர் தொகுதியில் என்கால்தடம் பதியாத கிராமங்கள், தெருக்கள் மற்றும் கோயில்கள் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக மண்ணச்சநல்லூர் தொகுதி வளர்ச்சிக்கும் மக்களின்முன்னேற்றத்திற்கும்எண்ணற்றதிட்டங்களைநிறைவேற்றித்தந்துள்ளேன்.தொகுதிமேம்பாட்டுநிதியைமுழுவதுமாகவளர்ச்சிபணிகளுக்குச்செலவிட்டுள்ளேன்.பல்வேறு நலத்திட்டங்களை எனது சொந்தபணத்திலும் நிறைவேற்றித் தந்துள்ளேன்.
எனதுதந்தைபெண்களைமதிக்ககற்றுக்கொடுத்துள்ளார்.இயல்பாகவேநான் பெண்களை மதிக்கத் தெரிந்தவன். பெண்களை அவமரியாதைப்படுத்திய யாருமே சமூகத்தில் முன்னேறியதாக சரித்திரம் இல்லை.
கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் அமைதியான, பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர். எனதுதொகுதிமக்களுக்கு அமைதியான வாழ்க்கையைதர விரும்புகிறேன். திமுக அரசுமக்களுக்கு செய்துவரும் நலத்திட்டங்களை பொறுத்துக் கொள்ளமுடியாத எதிர்க்கட்சியினர்உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். குறைகள்கூறமுடியாதகூட்டம்அவதூறுபரப்புவதில்அலாதிகாண்கிறது.
தொகுதியில் பணிகள் மற்றும்அவசர சேவைகளுக்காக ஒவ்வொருயூனியனுக்கும் JCB & Hitachi இயந்திரம்அளிக்கப்படும்.இதன்மூலம்சாலை, கால்வாய், குடிநீர்பணிகள் வேகமாக நிறைவேற்றப்படும்.கிராமப்புறங்களில்பணிகள்தாமதமின்றிசெயல்படுத்தப்படும்.உள்ளூர்நிர்வாகத்திற்குதன்னிறைவுமற்றும்செயல்திறன்உயரும்.மேலும்அவசரகாலங்களில்மக்களுக்குஉடனடிசேவைவழங்கமுடியும்.
தொகுதியில்உள்ள 63 ஊராட்சிகளுக்கும் தினமும்குறைந்த விலையில்சுத்திகரிக்கப்பட்டகுடிநீர்வசதிவழங்கஏற்பாடுசெய்துதரப்படும்.இதனால்மக்களின்ஆரோக்கியம்பாதுகாக்கப்படும்.
மேலும் எனதுமருத்துவமனையில் காலம்முழுவதும் தொகுதிமக்களுக்கு இலவச சிகிச்சையைதொடர்ந்துவழங்குவேன்.கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, நீர்ப்பாசனம், சாலைவசதிபோன்றஅடிப்படைதேவைகளைதொடர்ந்துநிறைவேற்றித்தரவும், தொகுதியைமேலும்வளர்ச்சியடைந்தபகுதியாகமாற்றவும், எனக்கு நீங்கள்உதயசூரியன் சின்னத்தில்வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.
இந்த பிரச்சாரத்தின் போது மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாசபெருமாள், திமுகநிர்வாகிகள் மற்றும்கூட்டணி கட்சியின்நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.