லால்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பாரிவள்ளல் வேட்புமனுத்தாக்கல்

0 117
Stalin trichy visit

திருச்சி, ஏப். 4 திருச்சி லால்குடி தொகுதியில் உற்சாக வரவேற்புக்கிடையே வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் பாரிவள்ளல்

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் பாரிவள்ளல் இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

லால்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ஸ்ரீதர் அவர்களிடம் பாரிவள்ளல் தனது மனுவைச் சமர்ப்பித்தார்.

முன்னதாக அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பாரிவள்ளலுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் குமார், தொழிலதிபர் முருகவேல், பார்க்கவ குல மக்கள் இயக்கம் சத்யநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்..

Leave A Reply

Your email address will not be published.