திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் – விஜய் பாதுகாவலர்கள் இடையே தள்ளுமுள்ளு
திருச்சி விமான நிலையத்தில் விஜய் யை வீடியோ எடுக்க விடாமல் தடுத்த பாதுகாவலர்கள் இதனால் பாதுகாவலர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள இருந்தார் இந்நிலையில் நேரமின்மை காரணமாக போலீசாரின் அனுமதி மறுக்கப்பட்டது அதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து பேசாமல் திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து சென்னை செல்ல இருந்தார் இதற்காக திருச்சி விமான நிலைய வந்த அவரை வீடியோ எடுப்பதற்காக செய்தியாளர்கள் குழுமியிருந்தனர் இந்நிலையில் விஜய் விமான நிலையம் வந்தபோது தனியார் பாதுகாவலர்கள் விஜய் யை வீடியோ எடுக்க விடாமல் செய்தியாளர்களை தடுத்தனர் இதனால் பாதுகாவலருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு
முன்னதாக விஜய் வருவதற்கு முன்பு உளவுத்துறை அதிகாரிகளிடம் ஐடி கார்டு கேட்டனர் இதனால் போலீசார்கள் பவுன்சர்களை எச்சரித்தனர்
இந்த நிகழ்வுகள் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது