ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் கருப்பு கொடி ஏற்றினார்
திருச்சி, ஏப். 16 ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சிராப்பள்ளி தென்னூரில் உள்ள அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லம் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்திலும் கருப்பு கொடிகள் ஏற்கப்பட்டுள்ளது.
“மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சிராப்பள்ளி தென்னூரில் உள்ள அமைச்சரும் திமுக கழக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் இல்லம் மற்றும் வி என் நகரில் அமைந்துள்ள திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்திலும் கருப்புக்கொடி ஏற்றி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்