திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் இறுதிகட்ட வாக்குச் சேகரிப்பு

0 20
Stalin trichy visit

திருச்சி, ஏப். 21 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இறுதிகட்ட தீவிர பிரச்சாரத்தால் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக  திருவெறும்பூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  இன்று காலை முதல் துவாக்குடி நகரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இறுதி கட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிகழ்வில் துவாக்குடி நகரக் கழகச் செயலாளர் காயம்பூ மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.