திருவெறும்பூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அன்பில் மகேஸை ஆதரித்து கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம்
திருச்சி,ஏப்.21 திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பள்ளிகல்வித்துறை அமைச் சர்அன்பில் மகேஸை ஆதரித்து, மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பரப்புரையில் நேற்று ஈடுபட்டார்.
திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அரிய மங்கலம், நேருஜி நகர் பகுதியில் பரப்புரை வாகனத்தில் நின்றபடி கமல்ஹாசன் பேசியதாவது: திருச்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருச்சியை முன்னேற்றுவதற்கான ஒரேபாதை கல்வி. அந்த மகத்தான பாதையில் அன்பில் மகேஸ் சிறப்பாக பயணித்து வருகிறார். அதனால், தமிழ்நாட்டில் பெண் கல்வி விகிதம்34 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதுபோன்ற ஆக்கபூர்வமான பணிகளை தொடர்ந்து கிடைக்கச் செய்ய, திருச்சியை மேலும் முன்னோக்கி எடுத்து செல்ல அன்பில்மகேஸ்க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நான் முதல்வன் திட்டத்தைக் கொண்டு வந் தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இத்தொகுதியில் ஒலிம்பிக் அகாடமி கொண்டு வந்தவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நான் கனவு கண்ட கல்வித்திட்டங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு டெல்லியில் உள்ளவர்களுக்கு வயிற்று எரிச்சல்” ஏற்படுகிறது. கல்வி, சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை கண்டு, டெல்லி ஆட்சியாளர்கள் (மத்திய அரசு) பொறுத்து கொள்ள முடியாமல்இருக்கின்றனர்.தமிழ்நாட்டின் முன்னேற் றத்திற்காக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், பகுதிச் செயலாளர் விஜயகுமார், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.