துறையூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

0 19
Stalin trichy visit

திருச்சி, ஏப்.22 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்கு இயந்திரம் அடங்கிய பெட்டிகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அறை திறந்து முறையாக பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனைக்கு பின், அந்த இயந்திரங்கள் 279 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் அதிகாரிகளின் கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றன.

நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு, மொத்தம் 1224 தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெற உறுதி செய்ய, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு காவல் கண்காணிப்பாளர் (SP), ஒரு கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP), 3 ஆய்வாளர்கள் ஆகியோரின் தலைமையில் சுமார் 400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் உள்ள 279 வாக்குச் சாவடிகளில், எஸ்.என். புதூர் வாக்குச் சாவடி “பதட்டமான” வாக்குச் சாவடியாக காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறும் நாளை முன்னிட்டு, அனைத்து அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணியாளர் ஒதுக்கீடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டு, தேர்தல் சுமூகமாக நடைபெற அதிகாரிகள் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.