தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்
திருச்சி, ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் மத்திய மாவட்டமான திருச்சியில் மொத்தமாக 2 ஆயிரத்து 787 வாக்குச்சாவடி மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மய்யங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவான சூழல் அமைத்து தர தேவையான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் முழுமையாக மேற்கொள்ளப்பட்டது. அதே போன்று வாக்குச்சாவடி மய்யத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்குத் தொகுதி வேட்பாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தில்லைநகர் மக்கள் மன்றத்தில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு – உதயசூரியன்தான் வெற்றி பெறும் என்று கூறினார்.