த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவதில் இழுப்பறிகள் : மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் பேட்டி

0 21
Stalin trichy visit

திருச்சி, மே 14 த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவதில் இழுப்பறிகள் : திருச்சியில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் பேட்டி.

சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர்திலக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

த.வெ.கவினர் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. திமுக, அதிமுகவை மையப்படுத்தியே குதிரை பேரம் நடந்துள்ளதாக சி.வி சண்முகம் கருத்திலிருந்து இருந்து தெரிகிறது.

அரசியலில் குழப்பமான சூழலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது நடக்க தான் செய்யும்.

த.வெ.க அரசு காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடம் வழங்கும் சில இழுப்பறிகள் இருக்கத்தான் செய்யும் அது விரைவில் சரியாகும் ஒரு இடமோ அல்லது இரண்டு இடமோ வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

சனாதனம் என்பது ஜாதி ஏற்றத்தாழ்வுகள் தான். அது ஒழிய வேண்டும் என தான் உதயநிதி பேசியுள்ளார்.

அதிமுக பிளவு எதிர் பார்த்தது தான்.

தமிழ்நாட்டில் தற்போது ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரு தரப்பிலும் மதச்சார்பின்மையை ஏற்றுக்கொண்ட கூடியவர்கள் தான் இருக்கிறார்கள். எனவே இங்கு பாஜக ஊடுருவ வாய்ப்பில்லை.

இந்தியா கூட்டணி என்பது பாஜக எதிர்ப்பை மையப்படுத்தியது தான். அந்த வகையில் பாஜகவை எதிர்க்கும் திமுக இந்தியா கூட்டணியில் தான் உள்ளது.
தேர்தல் முடிந்த இந்த நேரத்தில் சில நெருடல்கள் இருக்கிறது வரும் காலத்தில் அது சரியாகும்.

நீட் தேர்வை சரியாக நடத்த முடியாத ஆட்சி தான் பாஜக ஆட்சி உலகத்தின் விஸ்வகுரு என தன்னை அழைத்துக் கொள்ளும் பிரதமர் மோடியால் நீட் தேர்வை கூட நேர்மையாக நடத்த முடியவில்லை இதற்குப் பின் வேறு அரசியல் இருக்கும்.

ஜோசியரை தனது சிறப்பு அதிகாரியாக நியமித்த விஜய் அதற்கு எதிர்ப்பு வந்த பின்பு அதனை வாபஸ் பெற்றார் இது விஜய் நல்ல ஆலோசனைகளை உள்வாங்க தயாராக இருப்பதை காட்டுகிறது.

வரும் காலங்களில் சட்டசபையில் ஆரோக்கியமான விவாதங்கள் இருக்க வேண்டும்.

த.வெ.க அரசை கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டும் அவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை செய்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் கடந்த ஆட்சியில் அதுபோன்ற குழு ஏற்படுத்தப்படாததால் பல பிரச்சனைகளும் போராட்டங்களும் நடந்தது எனவே, இந்த ஆட்சியில் அப்படிப்பட்ட ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

பேட்டின் போது திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.