கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர்.இ.யு ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 18
Stalin trichy visit

திருச்சி,மே,14 இந்திய இரயில்வேயில் உள்ள மொத்த காலிப்பணியிடங்களில் 29,608 பணியிடங்களை சரண்டர் செய்யும் ஒன்றிய அரசின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி டி.ஆர். இ.யு பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் பொன்மலை ஆர்மரிகேட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு டி ஆர் இயு கோட்டத்தலைவர் லெனின் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், டி ஆர் இயு உதவி கோட்ட செயலாளர்கள் உச்சிமாகாளி, செல்வம், கோட்ட உதவி தலைவர்கள் பதுருதீன், கார்த்திக், பிரான்சிஸ் சேவியர்,
டி.ஆர்.பி.யு உதவி பொதுச்செயலாளர் மனோகர், கோட்ட உதவி தலைவர் மகேந்திரன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கிளை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து கமிட்டி உறுப்பினர்கள், தொழிலாளர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெனரல்-1 கிளை செயலாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.