திருச்சி மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு கே.என்.நேரு நன்றி தெரிவித்தார்

0 18
Stalin trichy visit

திருச்சி, மே 15 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தனக்கு வாக்களித்த திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதி வாக்காளர்களுக்கு கழக முதன்மை செயலாளர் கே.என். நேரு நன்றி தெரிவித்தார்.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு மேற்குத் தொகுதி வார்டு எண்- 51,52,53,54,55,56 பகுதிகளை சேர்ந்த செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், மார்சிங்பேட்டை, அந்தோணி யார் கோவில் தெரு, கான்வென்ட் ரோடு, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை முத்தரையர் சிலை, சேவா சங்கம், ராஜா காலனி, மிளகு பாறை, பொன் நகர், செல்வநகர், கருமண்டபம், பிராட்டியூர், ராம்ஜி நகர், கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் வாக்காளர் களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

மாலை 4 மணிக்கு மேற்குத் தொகுதி 62,57,58,60 வார்டுகளுக்கு உட்பட்ட பஞ்சப்பூர், செட்டியபட்டி, ராமச்சந்திரா நகர், எடமலைப் பட்டி, அந்தோணியார்கோயில் தெரு, நல்ல கேணி தெரு, மாரியம்மன் கோயில் தெரு,, கிராப்பட்டி சர்வீஸ் ரோடு, கான்வென்ட் தெரு, டி.எஸ்.நகர், அருணாச்சலம் நகர், பாரதி நகர், சிம்கோ காலனி, சக்திவிநாயகர் கோவில் தெரு, கிராப்பட்டி மெயின் ரோடு, தொண்டைமான் காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், தேவராயநேரி, ரங்கா நகர் அய்ந்து மற்றும் மூன்றாவது தெரு, மங்கம்மா சாலை, எஸ்.எம்.இ.சி காலனி, சுந்தர் நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை முஸ்லிம் தெரு, காஜாமலை ஆகிய பகுதிகளில் மாலை 4 மணிக்கு வாக்காளர் களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.