திருச்சி விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

0 51
Stalin trichy visit

திருச்சி, மே 20  திருச்சி விமான நிலையத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்துவரும் விமானங்களில் அதிக அளவில அதிக அளவிலான போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது, கடந்தவாரம் சுமார் ரூ15 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர்ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்கூட் ஆகிய விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அவர்கள் நடத்திய சோதனையில் சுமார் 30 பயணிகளிடமிருந்து ரூபாய் 5 கோடி மதிப்பிலான 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவருகிறது, இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 30 பயணிகளிடமும் தொடர் வசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் அதன் மதிப்பு குறித்து சுங்கத்துறையின் சார்பில் அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.