லாட்டரி சீட்டு – புகையிலை பொருள்கள் விற்ற 5 பேர் கைது
திருச்சி, ஆக.19 திருச்சி அரசு மருத்துவமனை எம்.எம். நகர் பகுதியில் லாட்டரிசீட்டுகள் விற்றதாக சோமரசம்பேட்டை பகுதியை (33) ஆகிய 2 பேரை அரசு மருத்துவமனை போலீசார் கைது சேர்ந்த பால்ராஜ் (54), ஆதி நகரை சேர்ந்த மணிகண்டன் செய்தனர். இவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், 2 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் உறையூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த சத்தியநாராயணன் (48) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை:
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா (43), வனிதா (34) மற்றும் நவாப் தோட்டம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.