டெண்டர் முறையில் ஏற்கனவே பின்பற்றப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் : நெடுஞ்சாலைதுறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் கோரிக்கை

0 44
Stalin trichy visit

திருச்சி, மே 20 வெளிமாநில ஒப்பந்ததாரர்கள் பங்கேற்காமல் இருக்க டெண்டர் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் – தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் கோரிக்கை

தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை ஒப்பத்தக்காரர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில, மண்டல, மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் திருசங்கு தலைமையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ஐயப்பன், மாநிலச் செயலாளர் வெங்கடேசன், மாநில துணைத்தலைவர் முத்து கோவிந்தன், மாநில செயலாளர் முருகேசன், மாநில துணைச் செயலாளர் சிவக்குமார், மாநில பொருளாளர் நிம்ரோட் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலத் தலைவர் திரிசங்கு

டெண்டர் முறையில் புதிய அரசின் கொள்கை முடிவை சங்கம் முழுமனதோடு வரவேற்கிறது. டெண்டர் முறையில் ஏற்கனவே பின்பற்றப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்,

வெளிமாநில ஒப்பந்ததாரர்கள் மற்றும் தகுதியில்லாத ஒப்பந்ததாரர்கள் பங்கேற்காமல் இருக்க மேற்கண்ட டெண்டர் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,

மத்திய அரசு நிதி விடுவிக்காமல் நிலுவையில் உள்ள ஊரக உள்ளாட்சி துறை சாலை பணிகளுக்கான நிதியை பெற்று தந்து ஒப்பந்தக்காரர்களை வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வழிவகை செய்ய வேண்டும்.

கிழக்கு ஆசிய போரால் தார் விலை 100% உயர்ந்து உள்ளதால் உடனடியாக அவற்றிற்கான விலை விகிதாச்சாரத்தை மத்திய அரசு வழங்குவது போல் மாநில அரசும் உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.