திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி : உறவினர்கள் – செவிலியர்கள் சாலை மறியல்

0 20
Stalin trichy visit

திருச்சி, மே 23  தவறான சிகிச்சையால் திருச்சி நர்சிங் மாணவி பலி – குடும்பத்தினர் உறவினர்கள் செவிலியர்கள் தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு – கலைச்செல்வி இவர்களது மகள் சீதாலட்சுமி (20) இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகள் சீதாலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளது.
இதற்காக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறினர். இதனை அடுத்து அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து உறவினரும், செவிலியர்களும் மருத்துவரின் தவறான சிகிச்சையால்
சீதாலட்சுமி உயிரிழந்ததாக குற்றம் சாட்டி திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வர் வந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனை முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.